astrology dinamani
மார்கழி மாத ராசிபலன்கள் – மிதுனம்
2017/10/21

கிரகநிலை:
தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், குரு – ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன், சுக்கிரன், சனி – சப்தம ஸ்தானத்தில் சூரியன் – அஷ்டம ஸ்தானத்தில் கேது என கிரக சஞ்சாரம் இருக்கிறது.

மார்கழி மாதம் 4ம் நாள் – 19.12.2017 – செவ்வாயன்று சனி பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திலிருந்து சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
மார்கழி மாதம் 6ம் நாள் – 21.12.2017 – வியாழன்று சுக்கிர பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திலிருந்து சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
மார்கழி மாதம் 20ம் நாள் – 04.01.2018 – வியாழன்று புதபகவான் ரண ருண ரோக ஸ்தானத்திலிருந்து சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
எப்போதும் சுறுசுறுப்பாக செயலாற்றும் மிதுன ராசியினரே நீங்கள் சுய கௌரவம் பார்ப்பீர்கள். நிதானமாக எந்த முடிவையும் எடுப்பீர்கள். இந்த காலகட்டத்தில் பணவரத்து மனமகிழ்ச்சியை தரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும். தைரியாதிபதி சூரியன் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் இருந்து ராசியைப் பார்க்கிறார்.. மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும். சுக்கிரன் சஞ்சாரத்தால் வாக்கு வன்மையால் நன்மையை தரும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

தொழில் ஸ்தானாதிபதி குரு ராசியை ஒன்பதாம் பார்வையால் பார்க்கிறார். தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு, வீண் அலைச்சல் குறையும். எதிர்பார்த்த அதிகாரம் அந்தஸ்து கிடைக்கும். சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள்.

குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். அதே நேரத்தில் அவர்களால் செலவும் வரும்.

பெண்களுக்கு உங்களது முயற்சிகளுக்கு இருந்த முட்டுகட்டைகள் அகலும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கையில் காசு புரளும்.

கலைத்துறையினருக்கு உடன் பணிபுரிபவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வரலாம். மற்றவர்களை திருப்தியடையச் செய்யும் வகையில் உங்களது செயல்கள் இருக்கும். டெக்னிக்கல் சார்ந்த துறையினருக்கு தொட்டதெல்லாம் துலங்கும்.

அரசியல் துறையினருக்கு முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். விருப்பங்கள் கைகூடும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை. வீண் பகை ஏற்படலாம். ராசியாதிபதி புதன் ராகுவுக்கு கேந்திரம் பெறுவதால் மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம்.

மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் நீங்கும். எதிர்காலம் பற்றிய திட்டம் தோன்றும். ஆசிரியர்களின் உதவி கிடைக்கும்.

பரிகாரம்: ஸ்ரீநரசிம்மரை தீபம் ஏற்றி தரிசித்து வர கடன் பிரச்சனை குறையும். வீண் அலைச்சல் மனோபயம் குறையும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: புதன், வெள்ளி; தேய்பிறை: புதன், வியாழன், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 22, 23

அதிர்ஷ்ட தினங்கள்: 30, 31

Previous Post
Next Post

Leave a comment