astrology dinamani
மே மாத எண்கணித பலன்கள் – 2
2019/05/09

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

எப்போதும் விழிப்புடன் இருக்கும் இரண்டாம் எண் அன்பர்களே, இந்த மாதம் நீங்கள் மற்றவர் மத்தியில் உயர்ந்து நிற்பீர்கள். தைரியம் அதிகரிக்கும். சகோதரர்கள் வகையில் மிக நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

நினைத்த வசதிகள் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். மனதெம்பு உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் கை கூடும்.

வாக்கு வன்மையால் காரியம் கைகூடும். ஆன்மிக எண்ணம் உண்டாகும். தொழில் வியாபாரம் நல்லநிலைக்கு உயரும். போட்டிகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.

நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும்.

கலைத்துறையினருக்கு நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அரசியல் துறையினர் மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது.

பெண்களுக்கு மனோதைரியம் கூடும்.சாமர்த்தியமான பேச்சால் எடுத்த காரியம் வெற்றி பெறும். மாணவர்களுக்கு கல்விநிலை உயரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்:  பஞ்சமுக தீபம் ஏற்றி அம்பாளை வணங்க நோய் நீங்கும். மனகுழப்பம் தீரும்.

Previous Post
Next Post