astrology dinamani
மே மாத எண்கணித பலன்கள் – 1
2019/05/09

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

திட்டமிடுவதில் கெட்டிக்காரர்களான ஒன்றாம் எண் அன்பர்களே, இந்த மாதம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். விரும்பிய  பொருள்களை வாங்கி மகிழ்வீர். முக்கிய நபரின் அறிமுகமும், உதவியும்  கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். மரியாதை கூடும். திட்டமிட்ட காரியங்கள் நன்றாக நடந்து முடியும்.

தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி சிறப்பாக நடக்கும். பணவரத்தும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் நிலை மேம்படும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.  வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் சென்று கலந்து கொள்ள நேரிடும்.

கலைத்துறையினர் பொறுமையுடன் செயல்பட வேண்டும். அரசியல்துறையினருக்கு மேலிடத்தில் இருப்பவர்களிடம் இருந்து மனம் நோகும்படியான வார்த்தைகள் வெளிப்படலாம். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில்  வெற்றிபெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை அன்று அம்மனை வணங்க எல்லா நலனும் உண்டாகும். எதிர்ப்புகள் நீங்கும்.

Previous Post