astrology dinamani
என் மகனுக்கு மறுமணம் உண்டா? – வாசகர், ஆரணி
2017/12/11

என் மகனுக்கு மறுமணம் உண்டா? – வாசகர், ஆரணி

எனது மகனின் முதல் மனைவி இறந்துவிட்டார். என் மகனின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானத்தில் சூரியனும் சுக்கிரனும் இருப்பதால் மருமகள் இறந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். மறுமணம் உண்டா? திருமணம் எப்போது நடைபெறும்?

உங்கள் மகனுக்கு கும்ப லக்னம். களத்திர ஸ்தானாதிபதி களத்திர ஸ்தானத்தில் ஆட்சிப் பெற்று இருப்பது சிறப்பு. இருப்பினும் வாழ்க்கைத் துணையின் இழப்பிற்கு களத்திர ஸ்தானத்தில் உள்ள கிரகங்கள் மட்டும் காரணமாக அமையாது. சுக ஸ்தானம், குடும்ப ஸ்தானம், அயன ஸ்தானம் ஆகிய இடங்களும் அவசியமாக பரிசீலிக்கப்பட வேண்டும். அதோடு, பெண்ணின் ஜாதகத்தில் ஆயுள் ஸ்தானம், களத்திர ஸ்தானம், மூன்றாம் வீடு ஆகியவைகளும் நன்றாக பரிசீலிக்கப்பட வேண்டும். அதனால் பொதுவாக, ஒரு கிரகத்தை மட்டுமே வைத்து மணவாழ்க்கையில் சிக்கல் என்று கூறுவது தவறாகும். அவருக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் மறுமணம் கைகூடும்.

பதில் – கே.சி.எஸ் ஐயர்

Previous Post
Next Post

Leave a comment