என் சகோதரியின் மனைவிக்கு விவாகரத்து கிடைத்து மீண்டும் திருமணம் அமையுமா? – வாசகி, வாணியம்பாடி

என் சகோதரியின் மனைவிக்கு விவாகரத்து கிடைத்து மீண்டும் திருமணம் அமையுமா? – வாசகி, வாணியம்பாடி

நானும் என் சகோதரியும் ஒரே வீட்டில் வாழ்க்கை பட்டவர்கள். எனக்கு குழந்தைகள் கிடையாது. எனது சகோதரியின் இரண்டு மகன்களுக்கும் சொத்து எழுதி வைத்துவிட்டோம். பெரியவனுக்கு மிகவும் ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்தோம். ஆனால் இப்போது விவாகரத்து கேட்டு வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. விவாகரத்து கிடைத்து மீண்டும் திருமணம் அமையுமா? இரண்டாவது பையனுக்கு திருமணம் எப்போது கைகூடும்?

====

அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் விவாகரத்து கிடைத்துவிடும். இன்னும் 2 ஆண்டுகளுக்குள் மறுமணம் கைகூடும். உங்கள் இரண்டாம் மகனுக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் கைகூடும். அவர்கள் இருவரின் மணவாழ்க்கைக்காக பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும். உங்கள் ஜாதகத்தின்படி லக்னாதிபதி உச்சம் பெற்றிருந்தாலும் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி பார்வை செய்வதாலும் இறுதிவரை வாழ்க்கை சீராகவே செல்லும். தற்சமயம் நடக்கும் லக்னாதிபதியின் தசையும் அதன்பின்பு நடக்கும் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியின் தசையும் மேன்மையாகவே செல்லும். உங்கள் சகோதரிக்கு 2018 ஆம் ஆண்டுக்குப்பிறகு வாழ்க்கையில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

-கே.சி.எஸ் ஐயர்

 

Previous Post
Next Post

Leave a comment