astro_dinamani
எந்த சூழ்நிலையிலும் ஜபிக்க வேண்டிய கணபதி காயத்ரி
2017/08/23

எந்த சூழ்நிலையிலும் ஜபிக்க வேண்டிய கணபதி காயத்ரி

முழுமுதற் கடவுளாகிய விநாயக பெருமானின் காயத்ரியை தினமும் சொல்லி வந்தால் வாழ்வில் பல்வேறு நன்மைகள் அடையலாம்.

ஓம் ஏக தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்.

இந்த மந்திரத்தை தினமும் காலையில் குளித்து விட்டு கணபதி முன்பாக கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து ஜபித்து வரலாம். இதனால் நமது பாவங்கள் தீரும். நீண்ட கால பிரச்னைகள் நீங்கும். இந்த மந்திரத்தை ஒரு வருடம் வரை ஜபித்து வந்தால் நியாயமான ஆசைகள் நிறைவேறும். இது அனுபவ உண்மை.

ஒம் கம் கணபதியே நமஹ

இது கணபதியின் மூல மந்திரம். இதை தொடர்ந்து ஜபித்து வந்தால் கணபதியை நேரில் காட்சியளிப்பார். இதுவும் பல ஆயிரம் தமிழ் மக்களின் அனுபவ உண்மை.

Previous Post
Next Post

Leave a comment