எந்த அபிஷேகத்திற்கு என்ன பலன்

எந்த அபிஷேகத்திற்கு என்ன பலன்

நாம் கடவுளுக்கு செய்யும் ஒவ்வொரு அபிஷேகத்திற்கும், ஒவ்வொரு திரவியங்களுக்கும் ஒவ்வொரு பலன் உள்ளது. அதன்படி இறைவனுக்கு அந்தந்த திரவியங்களால் அபிஷேகம் செய்தால் நம்  விருப்பங்கள் நிறைவேறும்.

மனதில் தூய்மையான எண்ணங்களும் பக்திக்கும் – நல்லெண்ணெய் அபிஷேகம்
மனசாந்தி ஏற்பட – தண்ணீர் அபிஷேகம்

அனைத்து செல்வங்களும், தீர்காயுளும் கிடைக்க – பஞ்சாமிர்த அபிஷேகம்
குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஆயுள் விருத்தியும் கிடைக்க – பால் அபிஷேகம்

தோஷங்கள் நீங்க – மஞ்சள் பொடி அபிஷேகம்
அனைவரும் நமக்கு உதவ முன்வரவும், ராஜவசியம் ஏற்படவும் – தயிர் அபிஷேகம்

குழந்தை பாக்கியம் உண்டாக – இளநீர் அபிஷேகம்
கஷ்டங்கள் நீங்கி .மன அமைதி, புத்தி தெளிவு ஏற்பட – கரும்புச்சாறு அபிஷேகம்

வியாதிகள் நீங்கி, கல்வியிலும், சாஸ்திரங்களிலும் ஆர்வமும், திறமையும் உண்டாக – தேன் அபிஷேகம்
குரல் இனிமை பெற – அரிசி மாவுப்பொடி அபிஷேகம்

லஷ்மி வாசம் உண்டாகவும், தாராளமாக பணம் புரளவும், கடன் தீரவும் – சந்தன அபிஷேகம்
உடல் குளிர்ச்சி பெற்று மனதிற்கு அமைதி கிடைக்க – சொர்ண அபிஷேகம்

இவ்வாறு அபிஷேகம் செய்வதினால், இறைவன் மனம் குளிர்ந்து நமக்கு அருள்புரிவார் என்பது நிச்சயம்.

Previous Post
Next Post

Leave a comment