எந்தத் திசையில் இருந்து மணமகன் அமைவார்? – வாசகி, வண்டலூர்
2017/11/11
என் மகளுக்கு அரசு வேலை கிடைக்குமா? எப்பொழுது கிடைக்கும்? திருமணம் எந்த வயதில் நடைபெறும்? நல்ல வரன் அமையுமா?
உங்கள் மகளுக்கு சிம்ம லக்னம், சிம்ம ராசி, அனுஷ நட்சத்திரம். களத்திர ஸ்தானாதிபதி ஆட்சி பெற்றிருக்கிறார். லக்னாதிபதி ஆறாம் வீட்டில் பலமாக இருக்கிறார்.
தர்மகர்மாதிபதிகள் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான குருபகவானால் பார்க்கப்படுகிறார்கள். அதோடு தற்சமயம் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியின் புக்தி நடப்பதால் அவருக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் படித்த நல்ல உத்தியோகத்திலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். அவருக்கு தனியார் துறையில் சிறப்பான உத்தியோகம் அமையும். தென்கிழக்கு திசையிலிருந்து வரன் அமைவார். பிரதி திங்கள் கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.
– ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர்