astro_dinamani
எண் கணிதபடி திருமணப் பொருத்தம் பாருங்கள்….
2017/07/02

எண் கணிதபடி திருமணப் பொருத்தம் பாருங்கள்….

“சமையல் மோசமானால் ஒரு நாள் நட்டம்.
அறுவடை மோசமானால் ஆறு மாதம் நட்டம்.
திருமணம் மோசமானால் வாழ்க்கையே நட்டம்”.

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் திருமணம் என்பது ஒரு முக்கியமான நிகழ்ச்சியாகும்.

மனிதர்களுடைய வாழ்க்கை திருமணத்தில்தான் முழுமையடைகிறது. திருமண பந்தத்தின் மூலமே உறவுமுறைகள் தழைத்து வளர்கின்றன. சந்ததிகள் உருவாகின்றன. அத்தகைய அற்புதமான உறவை எண் கணித ஜோதிடப்படி கைப்பிடித்தால், வாழ்வில் மகிழ்ச்சி பொங்கி வழியும் என்பது உறுதி.

திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்பதை பெரியோர்கள் சொல்லக் கேட்டிருப்பீர்கள். அது நூற்றுக்கு நூறு உண்மைதான். எனவே, உங்களுக்குப் பொருத்தமான மனைவியை தேர்ந்தெடுத்து மகிழ்ச்சியான மணவாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.

மனைவியைத் தேர்ந்தெடுக்கக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை, திருமண தேதிக்கும் கொடுக்க வேண்டும். திருமணம் செய்து கொள்ளும் நாளின் விதிஎண் அதாவது கூட்டு எண் 4, 5 அல்லது 8 ஆக இருத்தல் கூடாது.

கூட்டு எண் 5 என்றால், நீங்கள் எதிர்பார்க்காத பல சம்பவங்கள் நடப்பதுடன், வாழ்க்கையும் பயனற்றுப்போகும்.

கூட்டு எண் 4 வரும் நாளில் திருமணம் செய்து கொள்வீர்களானால் திடீரென வாழ்க்கையில் பல மாறுதல்களை உண்டாக்கும். அத்துடன் துன்பத்தையும் கொடுக்கும்.

முக்கியக் குறிப்பு: உங்களுடைய பிறவி எண்ணுக்கோ அல்லது கூட்டு எண்ணுக்கே விதி எண் பொருத்தமானவரை திருமணம் செய்து கொள்ளலாம்.

Previous Post
Next Post