astro_dinamani
உத்திராடம் 2-ம் பாதம் நட்சத்திரப் பலன்கள் (மகரம்)
2013/11/23

மென்மையானவர்கள், உண்மையானவர்கள். எதையும் மூடி மறைத்து செய்யும் குணம் இல்லாதவர்கள். திறந்த புத்தகம் மாதிரி இருப்பார்கள். ஏமாற்ற நினைப்பதில்லை. இந்த நல்ல குணத்தாலேயே  பல்வேறு பிரச்சனைகளை சந்திப்பதுண்டு. யாரையும் முழுமையாக  நம்புவது கிடையாது. நம்பிக்கை வைப்பது கடவுளிடம் மட்டும் தான். அவசரம் காட்டுவதில்லை. மெதுவாக செய்து முடிப்பதால் மற்றவர்கள் இவர்களை சோம்பேறிகள் என்று கூட சொல்வதுண்டு. கோபம் வந்தால் கூட எதிராளியின் மீது கடுமையான வார்த்தைகளை பிரயோகிப்பதில்லை.

இவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டினால், அந்த தவறை ஏற்றுக்கொண்டு, தான் செய்த தவறுக்கு வருத்தமோ, மன்னிப்போ கேட்க தவறுவதில்லை. மணவாழ்க்கை சிறப்பாக  அமையும். 28, 31 வயதுகளில் ஒரு முக்கிய திருப்புமுனை ஏற்படும். பின்னர் இவர்கள் வாழ்க்கை மிக சிறப்பாகவே இருக்கும்.

நட்சத்திர அதிதேவதை  :- கணபதி
பரிகார தெய்வம்   :- துர்க்கை
நட்சத்திர கணம்   :- மனுஷ கணம்
விருட்சம்    :- பலா மரம்
மிருகம்    :- ஆண் கீரி
பட்சி    :- வலியான்
கோத்திரம்   :- வசிஷ்டர்

Previous Post
Next Post