உத்திரம் 2-ம் பாதம் நட்சத்திரப் பலன்கள் (கன்னி)

வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். செய்யும் காரியங்கள் அனைத்திலும், உண்மையாகவும், ஈடுபாட்டோடும் செய்வார்கள். மிகவும் சாதுர்யம் மிக்கவர்கள். பெரும்பாலும் பொதுஜன தொடர்புடைய துறைகளிலேயே பிரகாசிப்பார்கள். ஒருமுறை முடிவு   செய்தால் அந்த முடிவை மாற்றிக் கொள்ளும் மனப்போக்கு இல்லாதவர்கள்.

சுயமுயற்சியில் தனம்  தேடும் ஆற்றல் மிக்கவர்கள். முற்பகுதி வாழ்க்கையில்  அதிக முன்னேற்றம் இருக்காது. 38 வயதுக்கு மேல்தான் சகல சம்பத்துக்களும் சேரும். திருமண வாழ்க்கை  நல்ல விதமாகவே அமையும். தைரியமானவர்கள், கர்வம் நிறைந்தவர்கள். தாய் அன்பு மிக்கவர்கள். இவர்கள் செய்யும் காரியங்களுக்கு சரியான காரணம் இருக்கும்.

நட்சத்திர தேவதை : – சூரியன்
பரிகார தெய்வம்   -: சிவன்
நட்சத்திர குணம் -: மனுஷ குணம்
விருட்சம்  -: அலரி
மிருகம்  -: ஆண் எருது
பட்சி   -: மரம்கொத்தி
கோத்திரம்  -: வசிஷ்டர்

Previous Post
Next Post