உத்திரட்டாதி நட்சத்திரப் பலன்கள் (மீனம்)

ஏழையோ, பணக்காரனோ அனைவரையும சமமாக  நினைப்பார்கள், களங்கம் இல்லாத மனம்,  பிறருக்கு துன்பத்தை தராத குணம் உள்ளவர்கள் . கோபம் வரும்.  அந்த கோபம் உடனே மாறிவிடும். ஒருவர் மீது அன்பு வைத்துவிட்டால் அவர்களுக்காக எதையும் செய்வார்கள். எளிதில் உணர்ச்சி வசப்படுவது இவர்கள் குறை. புண்படுத்தினாலோ , சிறுமைப் படுத்தினாலோ பொறுக்க மாட்டார்கள்.  சிங்கம் போல் சீறுவார்கள். ஒரே சமயத்தில்  பல விஷயங்களில் ஞானத்தையும், அறிவையும் பெற  முடியும்.

பள்ளிப் படிப்பு  குறைவாக இருந்தாலும் அனுபவ படிப்பு  அதிகம். கற்றவர்களைக் கவரும் விதத்தில் இவர்கள்  செய்கை இருக்கும். சுறுசுறுப்பு மிக்கவர்கள் . ஒரு  செயலை துவங்கி விட்டால் முடிக்கும் வரை  விடமாட்டார்கள். இவர்கள் வாழ்க்கை திருப்பமே திருமணத்திற்கு பிறகுதான் வருகிறது.

19, 21, 28, 30, 35, 42 வயதுகளில்  முக்கிய நிகழ்வுகள் உண்டு . திருமண வாழ்க்கை திருப்தி கரமாக அமையும்.

நட்சத்திர அதிதேவதை- : காமதேனு
பரிகார தெய்வம்  : துர்க்கை
நட்சத்திர கணம்  : மனுஷ கணம்
விருட்சம்   : வேம்பு
மிருகம்   : பசு
பட்சி    : கோட்டான்
கோத்திரம்   : அகத்தியர்

Previous Post
Next Post