astrology dinamani
இந்த நட்சத்திரக்காரர்கள் பல திறமைகளை கொண்டவர்கள்..!
2018/03/13

இந்த நட்சத்திரக்காரர்கள் பல திறமைகளை கொண்டவர்கள்..!

ராசிகளில் கடைசியாக உள்ள மீன ராசியில் வரும் நட்சத்திரமே ரேவதி. இந்த நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணநலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.

ரேவதி நட்சத்திரக்காரர்கள் பல திறமைகள் கைவசம் வைத்திருப்பார்கள். இவர்கள் பழி பாவத்திற்கு எப்போதும் பயந்தவர்கள். நேர்மையாக வாழும் இவர்கள், பேச்சில் இனிமையும், கொடுக்கல் வாங்கலில் நாணயம், உள்ளவர்கள்.

யாரிடம் தேவை இல்லாமல் பேசமாட்டார்கள். மற்றவர்கள் பேச்சைக் காது கொடுத்துக் கேட்பதில்லை. சுதந்திரமாக இருக்க விருப்பப்படும் இவர்கள், ரகசியம் காக்கத்  தெரியாதவர்கள். ஆனால் இவர்கள் ஒருவகையில் சந்தேகப் பிராணிகள். எவ்வளவுதான் உயிருக்கு உயிராக பழகினாலும நம்ப மாட்டார்கள்.  நம்பி விட்டால் அவர்களை விட்டு விலகமாட்டார்கள்.

மனம் போலவே நடப்பார்கள். தனக்கு சரி என்று தோன்றியதை துணிந்து செய்வார்கள். மற்றவர் அபிப்ராயங்களைப் பற்றி யோசிப்பதில்லை. சுய முயற்சியில்  முன்னுக்கு வருவார்கள். புத்திசாலித்தனம், சாமர்த்தியம் என்பது கூடப் பிறந்தது.  22 வயது வரை சோதனை காலம். பின் வாழ்க்கையில் உயர்ந்து உன்னத நிலையை எட்டிவிடுவார்கள். வாழ்க்கை சுமாராக அமையும்.

ரேவதி முதல் பாதம்

இவர்களிடம் ரேவதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

• ஆராய்வதில் சிறந்தவர்கள்.

• கலைகளில் ஆர்வம் கொண்டவர்கள்.

• மகிழ்ச்சியான மனநிலையை உடையவர்கள்.

ரேவதி இரண்டாம் பாதம் 

இவர்களிடம் ரேவதிக்குரிய பொதுவான குணங்களும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

• பல திறமைகளை கொண்டவர்கள்.

• செயல்திறன் கொண்டவர்கள்.

• எல்லா சுகங்களையும் அனுபவிப்பவர்கள்.

• உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள்.

• ஆடம்பர செலவுகளை விரும்பாதவர்கள்.

• நிலையற்ற மனநிலையை உடையவர்கள்.

ரேவதி மூன்றாம் பாதம் 

இவர்களிடம் ரேவதிக்குரிய பொதுவான குணங்களும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

• சிந்திக்காமல் செயல்படக்கூடியவர்கள்.

• சுயநலம் உடையவர்கள்.

• உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள்.

• துன்பங்களுடன் வாழக்கூடியவர்கள்.

ரேவதி நான்காம் பாதம்

இவர்களிடம் ரேவதிக்குரிய பொதுவான குணங்களும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

• எதையும் செய்யக்கூடியவர்கள்.

• உண்மையை பேசக்கூடியவர்கள்.

• சுகபோக வாழ்க்கை வாழக்கூடியவர்கள்.

• எதிரியை வெல்லக்கூடியவர்கள்.

• பிறரை மதிக்கக்கூடியவர்கள்.

Previous Post
Next Post

Leave a comment