astrology dinamani
ஜனவரி மாத எண்ஜோதிட பலன்கள் – 3
2016/06/15

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

எந்த ஒரு காரியத்திலும் நிதான போக்கைக் கடைபிடித்து வெற்றி பெறும் மூன்றாம் எண் அன்பர்களே இந்த வாரம் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று தாமதமாகலாம். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் இருந்த இழுபறி அகலும்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் அலைச்சலுக்கு பின் நடந்து முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும்.  குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை.

பெண்களுக்கு பணம் சார்ந்த விஷயங்களில் அதிக கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. கலைத்துறையினர் மற்றவர்களுக்கு உதவிகள் செய்யும்போது ஆலோசித்து செய்வது நல்லது.  அரசியல்துறையினருக்கு பதவிகள் தேடி வரும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. ஒரு முறைக்கு இருமுறை பாடங்களை படிப்பது நல்லது.

சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, புதன், வியாழன்

அனுகூலமான திசைகள்: வடக்கு, மேற்கு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 6

பரிகாரம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசித்து அர்ச்சனை செய்து வழிபட எல்லா துன்பங்களும் நீங்கும். மன அமைதி உண்டாகும்.

Previous Post
Next Post