astrology dinamani
செப்டம்பர் மாத பலன்கள் : ரிஷபம்
2016/03/01

rishabam

(கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

கிரகநிலை:
தைரிய வீரிய ஸ்தானத்தில் ராஹூ – சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு, சுக்ரன் – அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி – பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது – அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:
15.09.2018 அன்று பகல் 2.06 மணிக்கு புதன் பகவான்  சுகஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17.09.2018 அன்று மாலை 05.16 மணிக்கு சூர்ய பகவான் சுகஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் சுகாதிபதியை ஆட்சி நிலையில் அமையப்பெறும் ரிஷப ராசி அன்பர்களே, குடும்பத்தில் திருமண முயற்சிகளை சற்று தள்ளிபோட வேண்டி வரலாம். நல்ல யோகமான செய்திகளை கேட்க வேண்டி வரும். பிள்ளைகள் நலனுக்காக செலவு செய்ய வேண்டி வரும். அவர்கள் மனதில் உள்ளவற்றை  மனம் விட்டு பேச விடுங்கள். வெகுதூரத்தில் இருந்து வரும் செய்திகள் உங்களுக்கு சந்தோசத்தை கொடுக்கும். குடும்பத்திற்கு  தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

தொழிலில் நயமாக பேசுவதன் மூலம் விற்பனையை அதிகரிக்க முடியும். ஓய்வெடுக்கும் தருணங்களில் ஓய்வெடுக்கலாம். ஏனெனில் உடம்பில் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. புதிய நபர்களில் நட்பு கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகளை இப்போது எடுப்பது நல்லது. உங்களுக்கு சாதகமாக உங்கள் மேலதிகாரி நடந்து கொள்வார். வழக்கத்தை விட சற்று அதிகமாக உழைத்து பாராட்டை பெறுவீகள். தீடீரென்று எதிர்பாராத செலவு வரும்.

அரசியல்வாதிகளுக்கு அனுகூலமான மாதமாக இருந்தாலும் பற்பல சோதனைகளை சந்திக்க வேண்டி வரும். கலைத்துறையினருக்கு பல்வேறு வகைகளில் அனுசரனையாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த இழுபறிகள் நீங்கும். வாய்ப்புகள்   குவிந்த வண்ணம் இருக்கும். வெளிநாடுகள் சென்று வருவீர்கள்.

கலைத்துறையினர் கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. பயணங்கள் நெல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும்.

பெண்கள் குடும்ப நிர்வாகத்தை கவனித்து வருபவர்கள் கடினமாக உழைக்க வேண்டி வரும். எதிர்பார்த்த ஆதரவு கிடைக்காமல் போகலாம்.

மாணவர்களுக்கு கல்வியில் பாதிப்பு எதுவும் இல்லை. ஆனால் வாகனம் ஓட்டிச் செல்வதை தவிர்த்திடுங்கள். சிறு விபத்துகள் நேரலாம்.

கார்த்திகை 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் இதுவரை இருந்து வந்த பலவிதமான பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். பின் தங்கிய நிலையிருப்பவர்கள் முன்னேற்றப் பாதையில் செல்வார்கள்.

ரோகிணி:
இந்த மாதம்  எடுத்த காரியம் அனுகூலத்தை கொடுக்கும். வீடு, மனை ஆகியவற்றை வாங்கும் போது ஒருமுறைக்கு இருமுறை விசாரித்து வாங்குவது மிகச் சிறப்பானதாய் அமையும்.

மிருக சிரீஷம் 1, 2, பாதம்:
இந்த மாதம் சிலருக்கு நல்ல பணப்புழக்கம் ஏற்படலாம். உறவினர்கள் அன்னியோன்யமாக இருப்பார்கள். குடும்பத்தில் கணவன், மனைவியருக்கிடையே இருந்து வந்த பிரச்சனைகள் சுமூகமாக மறையும்.

சந்திராஷ்டம தினங்கள்: 18, 19
அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் – சனி
பரிகாரம்: முருகன் கோவிலுக்குச் சென்று அரளி பூ மாலை சாற்றி வணங்க நன்மை நடக்கும்.

 

Previous Post
Next Post