astrology dinamani
செப்டம்பர் மாத பலன்கள் : மேஷம்
2016/03/01

mesham

(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

கிரகநிலை:
ராசியில் சந்திரன் – சுக ஸ்தானத்தில் ராஹூ – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் – களத்திர ஸ்தானத்தில் குரு, சுக்ரன் – பாக்கிய ஸ்தானத்தில் சனி – தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:
15.09.2018 அன்று பகல் 2.06 மணிக்கு புதன் பகவான்  பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17.09.2018 அன்று மாலை 05.16 மணிக்கு சூர்ய பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் பஞ்சமாதிபதியை ஆட்சி நிலையில் அமையப்பெறும் மேஷ ராசி அன்பர்களே, குடும்பத்தில் அமைதி நிலவும். உணர்ச்சி வசப் பட்டு பேசுவதைத் தவிர்க்கவும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைபாடுகள் சரியாகும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல வரன் அமையப் பெறுவீர்கள்.  பல வருடங்களுக்கு முன்பு சந்தித்த உற்றார், உறவினர்களை இப்போது சந்திப்பீர்கள். பழைய கடன்களை அடைக்க இப்போது வழி பிறக்கும். சாமர்த்திய சாலி என்று அனைவரும் ஒப்புக் கொள்ளும்படி நடந்து கொள்வீர்கள்.

தொழில் ரீதியான வெளிநாட்டுப் பயணம் ஒன்றை ஏற்க வேண்டியிருக்கும். நடக்கும் தொழிலைப் பொறுத்தவரை நல்லபடியாக அமையும்.  வீண் அலைச்சல் அவ்வப்போது அலைய வேண்டியிருக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி ஒன்று வரும். அதனால் மனம் ஓரளவிற்கு நிம்மதி அடையும்

உத்தியோகஸ்தர்கள் நல்ல வருமானத்தை எதிர்பார்க்கலாம். வேலைக்குச் சென்று வரும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் கடின உழைப்பு ஏற்பட்டாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதால் நிம்மதியாக இருப்பீர்கள்.

அரசியல் துறையினர் மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம். மனதிற்க்குப் பிடித்தவர்களை சந்திக்க நேரிடலாம். பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். உடனிருப்பவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. ரகசியங்களை கையாளுவதில் கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு ஒப்பந்தங்கள் எடுப்பதில் கவனம் தேவை. லாபம் உண்டாகும். கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். சிறு சிக்கல்கள் ஏற்பட்டு மறையும். கவனத்துடன் செயல்பட்டால் சிக்கல்களைத் தவரிக்கலாம். சின்னச் சின்ன செலவுகளை சந்திக்க நேரிடலாம். உழைப்பிற்கான ஊதியம் சற்று குறைவாக கிடைக்கலாம். மன தைரியத்தால் வெற்றி காண்பீர்கள்.

பெண்களுக்கு தேவையில்லாத பிரச்சினைகள் வரலாம். எதிலும் கூடுதல் கவனம் செலுத்தி செயல்படுங்கள். இறைவனை வழிபடுங்கள்.

மாணவர்கள் வெளிநாடு சென்று மேற்கல்வி பயில வேண்டுமென்ற விருப்பமிருப்பின் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

அஸ்வினி:
இந்த மாதம் நல்ல பணப்புழக்கமும், பொருளாதார ஏற்றமும் இருக்கும். காரியத் தடைகள் நீங்கி, அனுகூலம் பிறக்கும். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சந்தித்து முறியடிக்கும் வல்லமையைப் பெறலாம்.

பரணி:
இந்த மாதம் எந்த வேலையிலும் உங்கள் தனித்தன்மை வெளிப்படும். எதிரிகளின் இன்னல்கள் இருக்கும் இடம் தெரியாமல் போகும். முன்னேற்றம் கண்டிப்பாக உண்டு என்பதை உறுதியாக சொல்லலாம்.

கார்த்திகை 1ம் பாதம்:
இந்த மாதம் நீண்ட நாட்களாக இருந்த வந்த காரியத்தடை அகலும். நண்பர்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். சுபகாரியங்கள் நடைபெறுவதற்கு நீங்கள் காரணமாக இருப்பீர்கள்.

சந்திராஷ்டம தினங்கள்: 15, 16, 17
அதிர்ஷ்ட தினங்கள்: 9, 10
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு –  புதன்
பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் பூ மாலை சூடி வணங்க மனக்கஷ்டங்கள் தீரும்.

Previous Post
Next Post