astrology dinamani
செப்டம்பர் மாத பலன்கள் : மகரம்
2015/12/01

makaram

(உத்திராடம் 2, 3, 4 பாதம்,  திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

கிரகநிலை:
ராசியில் செவ்வாய் (வ), கேது – சுக ஸ்தானத்தில் சந்திரன் – களத்திர ஸ்தானத்தில் ராஹூ – அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூர்யன், புதன் – தொழில் ஸ்தானத்தில் குரு, சுக்ரன் – அயன சயன போக ஸ்தானத்தில் சனி என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:
15.09.2018 அன்று பகல் 2.06 மணிக்கு புதன் பகவான்  அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17.09.2018 அன்று மாலை 05.16 மணிக்கு சூர்ய பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் அஷ்டமாதிபதியை ஆட்சி நிலையில் அமையப்பெறும் மகர ராசி அன்பர்களே, குடும்பத்தில் நிலவி வந்த கருத்து வேற்றுமைகள் மாறி சந்தோஷம் நிலவும். எனினும் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்துடன் வெளியில் சென்று வருவீர்கள். கணவன் – மனைவி உறவு சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடந்து கொள்வது மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். குடும்பத்திற்குத் தேவையான ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.

தொழில் – வியாபாரத்தில் முன்னேற்றம் எதிர்பார்த்ததைவிட இருக்கும். பெண் தொழிலாளர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு சிறந்த காரணமாக இருப்பார்கள். அவர்களுக்கு தேவையான வேலை சூழலைச் செய்து கொடுப்பதன் மூலம் உங்கள் லாபம் அதிகரிக்கும்.

உத்யோகஸ்தர்களுக்கு சில மனக்குழப்பங்கள் ஏற்பட்டாலும் நீங்கள் குழம்பாமல் சிறிது யோசித்துச் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
அரசியல்வாதிகள் பொதுச்சேவையில் அனுகூலமான  திருப்பங்களைக் காண்பீர்கள். கட்சி   மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். இதனால் உங்களை புதிய பதவிகள் தேடி வரும். எதிரிகள் உங்களிடம்  அடங்கி நடப்பார்கள்.   மக்களின் ஆதரவு எதிர்பார்த்த அளவுக்குக் கிடைத்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

கலைத்துறையினர் சிறப்பான புதிய  ஒப்பந்தங்களைப்   பெறுவீர்கள். இதனால் உங்கள் பெயரும், புகழும் உயரும். உங்களின் திறமைகள் பளிச்சிடும். சக கலைஞர்களுடன் ஒற்றுமையாகப்    பழகுவீர்கள். அவர்களிடமிருந்து நல்லுதவிகளைப் பெறுவீர்கள். புதிய வாகனங்களின் சேர்க்கை உண்டாகும்.

பெண்களுக்கு கணவனுடனான சண்டைகள் மறைந்து சுமூகமாக இருக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு படிப்பில் இருந்த தடைகள் நீங்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கவனம் சிதறாமல் பாடங்களைப் படித்து சிறந்து விளங்குவீர்கள்.

உத்திராடம் 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் தூர தேசப் பிரயாணம் ஏற்படும் ஆகையால் சீரான உணவுப் பழக்கத்தை கொண்டு வாருங்கள். மாணவர்கள் மாணவ கண்மணிகளுக்கு அனுகூலமான போக்கே காணப்படுகிறது. எதிலும் வெற்றி காண்பீர்கள்.

திருவோணம்:
இந்த மாதம் தீவிர முயற்சியின் பேரிலேயே எல்லாவித உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். நண்பர்களுடன் பழகும் போது எச்சரிக்கை தேவை. வெகு நாட்களாக தடைப்பட்டு வந்த திருமணத்திற்கு, புதிய வீடு கட்டுவதற்கான வேலைகளையும், இப்பொழுது துவங்கலாம்.

அவிட்டம் 1,2 பாதம்:
இந்த மாதம் பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். அமைதியாக விட்டுக் கொடுத்து போவதினால் மட்டுமே ஆதாயம் கிடைக்கும். நீங்கள் நல்வழியில் செல்ல பெரியோர் ஒருவருடன் ஒத்துழைப்பு கிடைக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: 9, 10
அதிர்ஷ்ட தினங்கள்: 2, 3, 30
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் – புதன்
பரிகாரம்: சிவன், பார்வதி ஆலயத்திற்குச் சென்று வர வீண் அலைச்சல் குறையும்.

Previous Post
Next Post