astrology dinamani
செப்டம்பர் மாத பலன்கள் : மீனம்
2015/03/01

meenam

 

(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

கிரகநிலை:
தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராஹூ – ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன் – அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு, சுக்ரன் – தொழில் ஸ்தானத்தில் சனி – லாப ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:
15.09.2018 அன்று பகல் 2.06 மணிக்கு புதன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17.09.2018 அன்று மாலை 05.16 மணிக்கு சூர்ய பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் ரண ருண ரோகாதிபதியை ஆட்சி நிலையில் அமையப்பெறும் மீன ராசி அன்பர்களே,
குடும்பத்திற்காக ஓய்வில்லாமல் உழைக்க வேண்டி வரலாம். பிரச்சினைகளை குடும்பத்தாரின் காதிற்கு கொண்டு செல்ல மாட்டீர்கள். மூத்த சகோதரி அல்லது சகோதரர்களால் இருந்து வந்த மனக் கசப்பு குறையும். உங்களை தானே மனம் வந்து இல்லத்திற்கு அழைப்பார்கள். நீங்களும் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். பிள்ளைகள் நலனில் அக்கறை என்ற பெயரில் அவர்களை மிகவும் வெறுமைப் படுத்த வேண்டாம்.

தொழில் சார்ந்த கடன்களை அடைக்க முடியும். தாமதமாக நடந்தாலும் சிறப்பான பலன்களை சில காரியங்களில் பெறுவீர்கள். உங்களுக்கு வர வேண்டிய பொருட்கள் தாமதமாக வருவதற்கான சூழலும் உள்ளது. எனினும் கவலை வேண்டாம்.

உத்யோகஸ்தர்களுக்கு வரவேண்டிய பணம் வந்து சேரும். நிலுவையில் இருந்த பாக்கிகளும் கைக்கு கிடைக்கும். தொழிலுக்காக புதிய இடம் வாங்குவதற்கும் வாய்ப்பு உள்ளது.

அரசியல்துறையினருக்கு எந்த ஒரு விஷயத்திலும் வேகம் காட்டினாலும் அதே நேரத்தில் அதில் உள்ள நன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுப்பது அவசியமாகிறது. காரிய அனுகூலம் உண்டாகும். காரிய தடைதாமதம் ஏற்படும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும்.

கலைத்துறையினருக்கு இழுபறி நிலை மாறி மன மகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும். தொழில் மந்தமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து இருக்கும். பணிகள் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம்.

பெண்கள் நினைத்ததை சாதித்துக் கொள்வீர்கள். ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வீட்டிற்குத் தேவையானதை வாங்கி மகிழ்வீர்கள்.

மாணவர்களின் அறிவுத் திறமை வெளிப்படும். ஆசிரியர்களிடம் பாராட்டு பெற்வீர்கள். மனதில் உற்சாகம் பிறக்கும்.

பூரட்டாதி 4ம் பாதம்:
இந்த மாதம் தெய்வ அனுகூலத்தால் கஷ்டங்களில் இருந்து விடுபட்டு முன்னேற்றம் வந்து சேரும். அதீத உழைப்பின் மூலம் வெற்றிகள் கிடைக்கும். வழக்கு, வியாஜ்ஜியங்கள் சாதகமாக இருக்கும். அதனால் சிலருக்கு கடன்கள் வரலாம்.

உத்திரட்டாதி:
இந்த மாதம் குடும்பத்தில் உறவினர்கள் முறையில் நிலவி வந்த பிரச்சனைகள் அனைத்தும் அடியோடு மறையும். சுப நிகழ்ச்சிகள் குடும்பத்தில் நிகழும். உங்கள் முயற்சிகளில் வெற்றியையும். பொருளாதார வளத்தையும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிப்பதையும் காண்பீர்கள்.

ரேவதி:
இந்த மாதம் கணவன், மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் உத்தியோகம் பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பர். பதவி உயர்வு, சம்பள உயர்வு, போன்றவை தங்கு தடையின்றி கிடைக்கும். உடன் பணிபுரிபவர்கள் ஆதரவுடன் இருப்பர்.

சந்திராஷ்டம தினங்கள்: 13, 14
அதிர்ஷ்ட தினங்கள்: 6, 7, 8
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் – செவ்வாய்
பரிகாரம்: விஷ்ணுவிற்கு தாமரை மலரை அர்ப்பணித்து வர உடல் உபாதைகள் குறையும்.

 

Next Post