astrology dinamani
செப்டம்பர் மாத பலன்கள் : துலாம்
2016/03/01

thulam

(சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)

கிரகநிலை:
ராசியில் குரு, சுக்ரன் – தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி – சுக ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது – களத்திர ஸ்தானத்தில் சந்திரன் – தொழில் ஸ்தானத்தில் ராஹூ – லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:
15.09.2018 அன்று பகல் 2.06 மணிக்கு புதன் பகவான்  லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17.09.2018 அன்று மாலை 05.16 மணிக்கு சூர்ய பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் லாபாதிபதியை ஆட்சி நிலையில் அமையப்பெறும் துலாம் ராசி அன்பர்களே,
குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் – மனைவி யாராவது ஒருவரது வேலையின் காரணமாக பிரிந்திருக்க நேரலாம். குடும்பத்தின் ஒற்றுமையை காக்க ஒருவருக்கொடுவர் விட்டுக்கொடுத்து செல்வது மிக முக்கியம். வழக்கு விவகாரங்களில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரலாம். புதிய வாகனம் வாங்க வேண்டிய எண்ணமிருப்பின் அது இப்பொழுது நிறை வேறும். எதிலும் பொறுமை, நிதானம் அவசியம்.

தொழிலுக்காக கடன் வாங்க வேண்டாம். பழைய கடன்கள் இருப்பின் அவை இப்பொழுது அடைபடுவதற்குச் சாத்தியக் கூறு உள்ளது. எக்காரணத்தைக் கொண்டும் மேற்கொண்டு கடன் வாங்க வேண்டாம். சிறு வியாபாரிகள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.

உத்தியோகத்தில் முக்கிய நபர்களை சந்திக்க வேண்டி வரலாம். பணப் பொறுப்புகளில் இருப்பவர்கள் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. மற்றவர்களின் பழி சொல்லுக்கு ஆளாக நேரிடும். தங்கு தடையின்றி வருமானம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச்  செய்வீர்கள்.  எதிரிகளால்   கஷ்டங்கள் உண்டாகாது என்றாலும் அவர்களின் மீது ஒரு கண் வைத்திருக்கவும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக்  காப்பாற்றிக்   கொள்ளவும். சச்சரவுகளில் வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம்.

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் தானாகவே    கிடைக்கும். அவற்றை முடித்துக் கொடுத்து நற் பெயர் வாங்குவீர்கள்.  மற்றபடி உங்கள் செயல்களை சீரிய முறையில் திட்டமிட்டுச்   செய்யவும்.  எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இன்று எது முக்கியமோ அதை செய்ய முற்படுங்கள்.

பெண்கள் வேலை பார்த்து வரும் அலுவலகத்தில் முன்னேற்றத்தை எதிர்பார்க்க முடியாது. எதிலும் பொறுமை நிதானம் தேவை.

மாணவச் செல்வங்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். படிப்பில் ஈடுபாடு அதிகமாக இருக்கும்.

சித்திரை 3, 4 பாதம்:
இந்த மாதம் கணவன், மனைவியிடையே அன்பும், பாசமும் பெருகும். ஏதேனும் ஒரு காரணத்தால் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேருவார்கள். தாயாருடன் இருந்து வந்த மனக்கசப்பு மறையும்.

சுவாதி:
இந்த மாதம் மனைவி வழியில் லாபம் உண்டு. உத்தியோகஸ்தர்கள் உத்தியோகம் ஒப்பந்தங்கள் நிறை வேறும். சிலருக்குப் பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

விசாகம் 1, 2, 3ம்  பாதம்:
இந்த மாதம் உங்கள் திறமையில் இருந்த பின்தங்கிய நிலை இனி மாறும். வெப்பம் சம்பந்தப்பட்ட உடல் உபாதைகள் குறையும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். செய்யும் வேலையில்  மனநிம்மதி உண்டாகலாம்.

சந்திராஷ்டம தினங்கள்: 2, 3, 30
அதிர்ஷ்ட தினங்கள்: 22, 23,24
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் – வியாழன்
பரிகாரம்: சனி பகவானுக்கு விளக்கேற்றி வணங்க மனம் தெளிவடையும்.

Previous Post
Next Post