astrology dinamani
செப்டம்பர் மாத பலன்கள் : கும்பம்
2016/03/01

kumbam

 

கும்பம்: (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)

கிரகநிலை:
தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் ராஹூ – களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன் – பாக்கிய ஸ்தானத்தில் குரு, சுக்ரன் – லாப ஸ்தானத்தில் சனி – அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:
15.09.2018 அன்று பகல் 2.06 மணிக்கு புதன் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17.09.2018 அன்று மாலை 05.16 மணிக்கு சூர்ய பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் களத்திராதிபதியை ஆட்சி நிலையில் அமையப்பெறும் கும்ப ராசி அன்பர்களே, குடும்பத்தில் பெண்களின் பேச்சால் நன்மைகள் ஏற்படும். திருமணம் கைகூடும். நீண்ட நாள் காத்திருந்த பெண்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்கள் வார்த்தைக்கு குடும்ப உறுப்பினர்களிடம் மதிப்பு கிடைக்கும். உங்கள் பேச்சைக் கேட்டு அனைவரும் சில காரியங்களைச் செய்வார்கள்.

தொழில் – வியாபாரம் உங்கள் உடல் நலத்தால் முடங்க வாய்ப்பு இருப்பதால், உங்கள் உடல் நலனை கவனித்துக் கொள்வது அவசியமாகிறது. வார்த்தைகளைக் கோர்த்துப் போட்டு பேசவும். தெரியாமல் வாக்கு கொடுக்க வேண்டாம்.

உத்தியோகத்தில் மேலிடத்தின் ஆதரவு உங்களுக்கு தான். அதனால் ஏதாவது பதவி உயர்வு பற்றிய கவலை இருந்தால் அதை விட்டொழியுங்கள். உங்களை அனைவருமே முன்மொழிந்து பரிந்துரை செய்யும் அளவிற்கு உங்களுக்கு சாதகம் தான்.

அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். கடந்த காலத்தில் ஒதுக்கி வைத்திருந்த திட்டங்களை செயல்படுத்த முனைவீர்கள். கட்சிப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். கட்சியில் மாற்றங்களைக் கொண்டு வர முயற்சிக்க வேண்டாம். தற்போது உள்ள நிலைமையைப் பயன்படுத்தி கட்சி மேலிடத்திடம் நல்ல பெயர் வாங்க முயற்சிக்கவும். சமுதாயத்தில் உங்கள் கௌரவமும், புகழும் உயரும்.

கலைத்துறையினருக்கு விருதுகளும் பாராட்டுகளும் கிடைக்கும். கால தாமதம் ஏற்பட்டாலும் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். சக கலைஞர்களில் நம்பகமானவர்களைக் கலந்தாலோசித்த பிறகே முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். தொழிலில் நிலவிய போட்டி, பொறாமைகள் குறையும்.

பெண்கள் பிள்ளைகளின் முன்னேற்றத்தை பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருப்பீர்கள். பேச்சால் அனைவரையும் கவருவீர்கள்.

மாணவ மணிகளுக்கு எதிர்காலத்தை பற்றிய சிந்தனை மேலோங்கும். மிகப்பிரகாசமான வழியை அமைக்க ஆசிரியர்கள் உதவுவார்கள்.

அவிட்டம் 3, 4 பாதம்:
இந்த மாதம் தீவிர முயற்சிகளின் பேரில் சில சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். தெய்வ அனுகூலத்தால் சிக்கலில் இருந்து விடுபட்டு முன்னேற்றம் ஏற்படும். தூரத்திலிருந்து வரும் செய்திகள் உங்களுக்கு அனுகூலம் இல்லாமல் இருக்கலாம்.

சதயம்:
இந்த மாதம் குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவதால் நிலைமையைச் சமாளிக்கலாம். கணவன், மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். வீட்டில் சின்னச் சின்ன வாக்கு வாதங்கள் தலை தூக்கலாம்.

பூரட்டாதி 1, 2, 3 பாதம்:
இந்த மாதம் உத்தியோகஸ்தர்கள் உடன்பணிபுரிபவரால் அனுகூலம் உண்டு. உங்கள் பொறுப்புகளை வேறு நபரிடம் ஒப்படைக்க வேண்டாம். சிலருக்கு இடமாற்றம் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் நடக்கும். வேலைப் பளு அதிகமாக இருக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: 11, 12
அதிர்ஷ்ட தினங்கள்: 4, 5
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன் – வெள்ளி
பரிகாரம்: பெருமாள் ஆலயத்திற்குச் சென்று துளசி சாற்றி வழிபட பணப்பிரச்சனைகள் குறையும்.

 

Previous Post
Next Post