astrology dinamani
செப்டம்பர் மாத பலன்கள் : கன்னி
2016/03/01

kanni

(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

கிரகநிலை:
தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு, சுக்ரன் – சுக ஸ்தானத்தில் சனி – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது – அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சந்திரன் – லாப ஸ்தானத்தில் ராஹூ – அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:
15.09.2018 அன்று பகல் 2.06 மணிக்கு புதன் பகவான்  அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
17.09.2018 அன்று மாலை 05.16 மணிக்கு சூர்ய பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் விரையாதிபதியை ஆட்சி நிலையில் அமையப்பெறும் கன்னி ராசி அன்பர்களே,
குடும்பத்தில் தாங்கள் அன்றாடம் செய்து வரும் பணிகளில் எந்த தொய்வும் இருக்காது. வெளியிடங்களுக்கோ அல்லது வெளியூர் பயணத்தின் போதோ தங்கள் உடைமைகளை மற்றும் பணத்தை  கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. தடைகளை களைந்து சாதிக்க வேண்டி வரும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டியிருந்தால் அதை சற்று தள்ளிப்போடவும். கூடிய வரை வீண் விவாதங்களில் தடையிடாமல் இருப்பது நல்லது.

தொழிலைப் பொறுத்தவரை இப்போதைக்கு கடன்கள் வாங்காமல் சமாளிப்பது  நன்மையைத் தரும். எதிலும் நம்பிக்கையையும் , மன உறுதியையும் மட்டுமே நம்பி வியாபாரத்தை செய்து வாருங்கள். உங்கள் மன உறுதி உங்களை காப்பாற்றும்.

உத்தியோகத்தில் முயற்சிகளைச் செய்து வாருங்கள். திறம்படச் செய்து முடிக்க அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். அலுவலக வேலை காரணமாக நேரத்திற்கு உணவருந்த முடியாமல் போகலாம். அதனால் வயிற்று உபாதைகள் வரலாம்.

அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் ஆதரவு   சில நேரங்களில் கூடுதலாக கிடைக்கும். ஆதரவு குறைந்த நேரங்களில் சற்று அடங்கிப் போகவும்.  கட்சி மேலிடத்திற்குத் தகவல்   அனுப்பும்போது அவர்களின் எண்ணங்களை அறிந்துகொண்டு எச்சரிக்கையுடன் இருக்கவும். மற்றவர்களுக்கு முன் ஜாமீன்  போட வேண்டாம்.

கலைத்துறையினர் வெற்றி மேல் வெற்றி காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சக கலைஞர்களால் பாராட்டப்படுவீர்கள்.  புதிய   நண்பர்களால் பலன் அடைவீர்கள். படைப்புகளை உருவாக்குவதில் முனைப்புடன் ஈடுபடுவீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். சேமிப்புகள் உயரும்.

பெண்களுக்கு சில மன உளைச்சல்கள் வரலாம். உங்கள் பிரச்சினைய  யாரிடமாவது மனம் விட்டு பேச ஆசைப்படுவீர்கள்.

மாணவர்கள் விளையாட்டுகள், மற்றும்  போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டாம். யாரிடமும் வாக்கு வாதங்களில் ஈடுபட வேண்டாம்.

உத்திரம் 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் வியாபாரிகள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சிலர் போடும் திட்டம் உங்களுக்கு இடையூறாக இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள்.

அஸ்தம்:
இந்த மாதம் நற்சுகமும் பொருளாதார மேம்பாடும் உண்டாகும். நன்மைகள் கிடைக்கும். மதிப்பு, மரியாதை கூடி செல்வாக்கு அதிகரிக்கும். உடல் நலனைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும்.
சித்திரை 1, 2, பாதம்:
இந்த மாதம் இறையருளும், நம்பிக்கையும் கூடும். வேலையில்லாமல் தவித்தவர்களுக்கு தகுந்த சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகும்.

சந்திராஷ்டம தினங்கள்: 1, 27, 28, 29
அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் – வெள்ளி
பரிகாரம்: நவகிரகத்தில் உள்ள குருவை வணங்க காரியத்தடை நீங்கும்.

 

Previous Post
Next Post