astrology dinamani
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2018 – தனுசு
2014/12/29

dhanusu

(மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

இந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் ஒன்றன்பின் ஒன்றாக செயல்கள் பூர்த்தியடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பணம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும்.  நம்பிக்கையுடன் உங்கள் காரியங்களில் ஈடுபடுவீர்கள். சிறிது ஆடம்பரச் செலவுகளும் செய்வீர்கள். நண்பர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்வீர்கள்.

குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தைகள் பேரக்குழந்தைகள் பிறக்கும் ஆண்டாகவும் இது அமைகிறது. புதிய முதலீடுகளில் தைரியத்துடன் ஈடுபடலாம். உங்களின் முழு திறமையை வெளிக்கொண்டு வருவீர்கள். பழைய கடன்களும் வசூலாகும். எதிரிகளின் பலம் குறைந்து அவர்களை விரட்டும் ஆற்றலையும் பெறுவீர்கள். வீடு, வாகனம் வாங்கும் யோகம்உண்டாகும்.

தருமக்காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். மனதில் இருந்த அழுத்தங்கள் மறைந்து தெளிவாகச் சிந்திப்பீர்கள். எவருக்கும் முன்ஜாமீன் போடுவதோ வாக்குக்கொடுப்பதோ கூடாது. குறிப்பாக மற்றவர்களுக்கு உங்கள் பெயரில் கடன் வாங்கிக் கொடுப்பது அறவே கூடாது. சாதுர்யமாக பேசி எவரையும் பகைத்துக் கொள்ளாமல் இருந்தால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

ஜூலை மாதம் முதல் இந்த ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் அனைத்து வேலைகளிலும் கடுமையான உழைப்புக்குப் பிறகே வெற்றி கிடைக்கும். உங்கள் வேலைகளை மற்றவர்களை நம்பிக் கொடுக்க வேண்டாம். வெகுதூரத்திலிருந்து மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். வெளிநாட்டுப் பயணம் கைகூடும். சேமிப்பு விஷயங்களில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உங்களைப் பற்றி அவதூராக பேசியவர்களைக் கண்டறிந்து உங்களை தெளிவுபடுத்தி விலகிவிடும் காலகட்டமாக இது அமைகிறது.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் சிறப்பாக முடியும். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும் . சக ஊழியர்கள் ஆதரவும் நட்பும் கிடைக்கப் பெறுவதால் உங்கள் அந்தஸ்து அலுவலகத்தில் உயர்ந்து காணப்படும். சில முக்கிய பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வைக் காண்பீர்கள். உங்கள் வேலைகளை முன்கூட்டியே யோசித்துச் செய்வது நலம் பயக்கும். வியாபாரிகள் பணப்புழக்கம் நன்றாக இருக்கக் காண்பார்கள்.

அரசு வழியில் அனுகூலங்களைக் காண்பார்கள். உங்கள் வசீகரத் திட்டங்களில் வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். கூட்டாளிகளிடம் பகை, மறைமுக விரோதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும்.
புதிய முயற்சிகளில் சிறியதாக முதலீடு செய்யலாம். விவசாயிகளுக்கு லாபங்கள் அதிகரிக்கும். நீர்ப்பாசன வசதிகளுக்காகச் சிறிது செலவு செய்ய நேரிடும். கொள்முதல் வியாபாரத்தில் அதிக கவனம்
செலுத்தவும். அரசு மானியங்கள் வந்தடையும்.

அரசியல்வாதிகள் தங்கள் முயற்சிகளில் வெற்றிகளைக் காண்பீர்கள். சமுதாயத்தில் பெயர் புகழ் கூடும். கட்சியில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். கட்சி மேலிடம் உங்கள் செயல்களை ஊன்று
கவனிக்கும். மறைமுக நேர்முக எதிர்ப்புகளைப் பற்றிக் கவலைப்பட மாட்டீர்கள். தொண்டர்கள் உங்கள் பேச்சுக்கு கட்டுப்படுவர்.

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். முயற்சிகள் அனைத்தும் உங்களை முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்லும். புதிய நட்புகள் புதிய வாய்ப்புகளையும் தரும். சக கலைஞர்களும் ரசிகர்களும் ஆதரவு தருவார்கள். நீங்கள் கடினமாக உழைத்து முழு திறமையையும் வெளிக்கொண்டு வருவீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும் ஆண்டாக இது அமைகிறது.

பெண்மணிகள் கணவன் மனைவி வகையில் விரிசல் ஏற்படாமல் கவனமாக இருக்கவும். உடன் பிறந்தவர்களால் பிரச்னைகள் உண்டாகலாம். பிள்ளைகளால் கவலைகள் உண்டாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடத்தும்போது உறவினர்களுக்கு உரிய மரியாதையை கொடுத்து கௌரவிக்கவும். மாணவமணிகள் உற்சாகமான மனநிலையுடன் படிப்பார்கள். வருங்காலத் திட்டங்களுக்காக அடித்தளம் போடுவீர்கள். விளையாட்டுகளிலும் சிறு வெற்றிகள் கிடைக்கும். தன்னம்பிக்கை படிப்படியாக வளரும்.

பரிகாரம்: சனிபகவானை வழிபட்டு வரவும்.

 

Previous Post
Next Post