astro_dinamani
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2017 – கன்னி
2014/12/29

kanni(உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

இந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் நல்லவர்களின் நட்பு தேடி வரும். அவர்களால் பழைய சிக்கல்கள் தீர்ந்துவிடும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் உங்கள் உதவிகளைப் பெற்று நலமடைவார்கள். பொருளாதார நிலை உயரும். அரசு அதிகாரிகள் உங்கள் செயல்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். எதிலும் சிந்தித்து நல்ல முறையில் செயல்படுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்கும்முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து எடுக்கவும். தெய்வ காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். நெடுநாளாக நடக்காமல் இருந்த பாகப்பிரிவினை சுமுகமாக நடக்கும். உங்கள் மனதில் தன்னம்பிக்கை குடிகொள்ளும். உங்களுக்கு உறுதுணையாக நண்பர்களைச் சேர்த்துக்கொள்வீர்கள். வாழ்க்கையில் புதிய சூழ்நிலைக்கு உங்களை பழக்கப்படுத்திக்கொள்வீர்கள். அனைத்து விஷயங்களையும் நடைமுறைக்கு ஏற்றவாறு பார்ப்பதால் கஷ்டங்கள் எதையும் சந்திக்கமாட்டீர்கள். நீண்டகால லட்சியங்கள் கனவுகள் நிறைவேற அடித்தளம் அமைத்துக்கொள்ளும் காலகட்டமாக இது அமைகிறது.

செப்டம்பர் மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் எதிர்பாராத பணவரவு கிடைக்கும். பொருளாதாரத்தில் தட்டுப்பாடு எதுவும் உண்டாகாது. செய்தொழில் விறுவிறுப்பாக நடக்கும். புதிய முயற்சிகளை சிறப்பாக செயல்படுத்துவீர்கள். அனைத்து புதிய வாய்ப்புகளையும் ஏற்றுக்கொள்வீர்கள். சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்தும் கௌரவமும் உயரும். பெற்றோரின் ஆதரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் குதூகலம் தாண்டவமாடும்.பிள்ளைகள் சொல்பேச்சு கேட்டு நடப்பர். போட்டியாளர்களின் தொந்தரவுகள் மறையும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். ஆலய திருப்பணிகளை முன்னின்று நடத்துவீர்கள். பங்குவர்த்தகத்தின் மூலமும் லாபம் வரக்காண்பீர்கள். புனிதத் தலங்களுக்கு யாத்திரை செல்வீர்கள். குறிக்கோள்களை அடைவீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். உடன்பிறந்தோருக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். நெடுநாளாக விற்க முடியாமல் கஷ்டப்பட்ட நிலம் இந்த காலகட்டத்தில் நல்ல விலைக்கு விற்கும். மனதில் தெளிவான சிந்தனைகள் பிறக்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். கணக்கு வழக்குகளை சரியாகச் சமர்ப்பிக்கவும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். பழைய கடன்களையும் முழுமையாக திருப்பிச் செலுத்தி விடுவீர்கள் என்றால் மிகையாது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சரியாகச் செய்தாலும் செய்யாத தவறுகளுக்காக மேலதிகாரிகளின் கண்டனத்திற்கு ஆளாவீர்கள். விரும்பத்தகாத இடமாற்றங்கள் ஏற்படலாம். எதிர்பார்த்த பதவி உயர்வு வாய்ப்புகள் நழுவிப்போகலாம். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். வியாபாரிகள் அதிகமாக விற்பனை செய்தும் எதிர்பார்த்த லாபத்தைப் பெறமுடியாமல் போகும். சிலருக்கு நண்பர்களுடன் பகை ஏற்படும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. தற்சமயம் நடத்திவரும் தொழிலை அக்கறை மற்றும் பொறுமையுடன் செய்வது நல்லது. கடன் கொடுத்து வியாபாரத்தை பெருக்க நினைக்க வேண்டாம். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த அளவு விளைச்சல் இருக்காது. ஆகவே கடன் வாங்குவதைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். கால்நடைகளுக்கு நோய் பாதிப்பும் அதனால் மருத்துவச் செலவும் உண்டாகும்.

அரசியல்வாதிகள் பெரிய அளவிலான பதவிகளைப் பெற வாய்ப்பு இருக்காது. இந்த ஆண்டு கட்சி மேலிடத்தின் பார்வையிலிருந்து ஒதுங்கி நின்று செயல்படவும். எந்த முடிவையும் தீவிரமாக ஆலோசித்து எடுத்தால் கெட்டப்பெயர் ஏற்படாமல் தப்பிக்கலாம். கலைத்துறையினருக்கு சிறப்பான புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அனைத்து தடைகளையும் திறமையுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். திறமைகளுக்கு தக்க அங்கீகாரம் கிடைக்கும். பெண்மணிகள் கணவரிடம் பாராட்டுகளைப் பெறுவார்கள். ஆடை ஆபரணங்களையும் வாங்குவார்கள். மாணவமணிகள் கடினமாக உழைத்துப் படித்தால் எதிர்பார்த்த பலனை அடையலாம். நண்பர்களால் பிரச்னைகள் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

பரிகாரம்: வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியரை வழிபட்டு வரவும்.

 

Previous Post
Next Post