astro_dinamani
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – 2017 – கடகம்
2014/12/29

katakam (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

இந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் பிரச்னைகள் குறையும். நிதானமாகவும் பொறுமையுடனும் பணியாற்றுவீர்கள். வேலைகளை நண்பர்கள் உதவியுடன் வெற்றியுடன் முடித்துவிடுவீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். புதிய முதலீடுகள் செய்வீர்கள். எதிரிகளை ஒடுக்கும் வல்லமையை பெறுவீர்கள். குடும்பத்தில் பகைமை மறைந்து இணக்கம் சூழும். மனதில் இருந்த குழப்பங்களை ஒதுக்கி வைத்துவிட்டு செயல்களில் அக்கறை காட்டுவீர்கள். சிறிய மீனைப்போட்டு பெரிய மீனைப் பிடிப்பீர்கள். பிரச்னைகளிலிருந்து பின்வாங்காமல் கடினமாகப் போராடி வெற்றி பெறுவீர்கள். சமுதாயத்தில் புதிய பொறுப்புகள் தேடிவரும். குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். அவர்களுக்குத் தக்க ஆலோசனைகளையும் வழங்குவீர்கள். வெளிநாடு சம்பந்தமான விஷயங்கள் ஆக்கம் தரும். குடும்பத்தில் சுப காரியங்களைச் சிறப்பாக நடத்துவீர்கள். ஆன்மிக விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

செப்டம்பர் மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் சிறிய அளவு முயற்சிகளிலும் பெரிய அளவுக்கு வெற்றி காண்பீர்கள். செய்தொழிலில் போட்டி பொறாமைகள் இருந்தாலும் அவைகள் உங்களை பாதிக்காது. சிலருக்கு வசிக்கும் இடத்தைவிட்டு வேறு இடத்திற்கு மாறும் யோகமும் உண்டாகும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். நண்பர்களின் பேச்சில் உள்ள உள்ளர்த்தங்களுக்கு ஏற்ப நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வீர்கள். நன்றாக சிந்தித்து தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். நெடுநாளைய கனவு ஒன்று பலிக்கும். குழந்தை இல்லாதோருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். கடன் தொல்லை இராது. அனைத்து காரியங்களையும் உடனுக்குடன் முடித்துவிடுவீர்கள். முட்டுக்கட்டைகளைத் தகர்த்து விடுவீர்கள். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். புதிய நிலங்கள் வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்துக்களிலிருந்த பிரச்னைகள் தீர்ந்து சுமுகமான பாகப்பிரிவினை நடக்கும். இந்த காலகட்டத்தில் எவருக்கும் உங்கள் பெயரில் பணம் வாங்கித் தருவதோ, முன்ஜாமீன் போடுவதோ கூடாது.

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு விரும்பிய இடமாற்றம் போன்றவை கிடைக்க வாய்ப்புண்டாகும். சக ஊழியர்கள் உங்களை அனுசரித்துச் செல்வதால் மேலதிகாரிகளிடம் நற்பெயர் எடுப்பீர்கள். அலுவலக வேலை விஷயமாக நீங்கள் செய்யும் பயணங்களால் நன்மை உண்டாகும். வியாபாரிகள் தற்போது செய்து
வரும் வியாபாரத்தை சிறப்பாக நடத்தினாலே போதும் என்கிற நிலைமை இருக்கும். நண்பர்களை பெரிதாக நம்பி எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். கையிலிருக்கும் பணத்தை எடுத்து புதிய முதலீடுகள் எதுவும் செய்ய வேண்டாம். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்காது. கால்நடைகளும் எதிர்பார்த்த வருமானத்தைத் தராமல் போகலாம். உழைப்புக்கேற்ற பலன்களும் கிடைக்காமல் போகலாம்.

அரசியல்வாதிகள் எதையும் அவரசப்பட்டு பேசியோ, செய்தோ வீண் விவகாரங்களில் மாட்டிக்கொள்ள வேண்டாம். பெரிய பதவிகள் திடீரென்று தேடி வந்தாலும் அவற்றில் வெகு நாள்களுக்குத் தாக்கு பிடிக்க முடியாது. கலைத்துறையினருக்கு இருக்கும் ஒப்பந்தங்களை முடித்துக் கொடுப்பதே பெரிய விஷயமாகிவிடும் சக கலைஞர்களும் உதவியாக இருக்கமாட்டார்கள். கடினமான முயற்சிகளுக்குப் பிறகே எண்ணங்கள் நிறைவேறும். பெண்மணிகள் கணவரிடம் கொண்டுள்ள நெருக்கத்தில் விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் எதிலும் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். பணப்புழக்கம் குறைவாக இருக்கும். மாணவமணிகளுக்கு படிப்பில் தடை ஏற்பட வாய்ப்புண்டு. ஆகவே கவனம் தேவை. எச்சரிக்கையுடன் கூடுதல் முயற்சியுடன் படிக்கவும்.

பரிகாரம்: அனுமனை வழிபட்டு வரவும்.

 

Next Post