ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – 2016: சிம்மம்

simmamசிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

இந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உறவினர்கள் நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் குதூகலம் பூத்துக் குலுங்கும். இல்லத்தில் உங்கள் பேச்சுக்கு எதிர்பேச்சிராது. இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். எனினும் சிக்கனமாக இருந்து சேமிப்புகளையும் பெருக்குவீர்கள். உத்தியோகம் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு திடீரென்று தொழில் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். நன்றாக யோசித்து செயலாற்றுவீர்கள். சமுதாயத்தில் தலைவன் என்று பெயரெடுப்பீர்கள். இல்லத்தில் சுபகாரியங்கள் கைகூடும். சுயதேவைகளைக் குறைத்துக்கொண்டு உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்கு உதவி செய்வீர்கள். உங்கள் கெட்டிக்காரத்தனம் கூடும். செல்வாக்கு, அந்தஸ்து இரண்டும் உயரும். இறைவழிபாட்டில் கவனத்தை அதிகப்படுத்துவீர்கள். ஏழைகளுக்குத் தானதர்மம் செய்வீர்கள். நெடுநாளாக கருத்தரிக்காமல் இருந்தவர்கள் இந்த காலகட்டத்தில்
கருத்தரிப்பார்கள்.

ஆகஸ்டு மாதத்திலிருந்து இந்த ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் நீடித்து பாதித்து வந்த நோய்கள் முழுமையாக குணமடைந்துவிடும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பெரிய ஆலய நிர்மாண வேலைகளிலும் ஈடுபடுவீர்கள். தேவைக்குமேல் பணம் வரும். வராமல் இருந்த கடன்களும் திரும்ப வந்து சேரும். பொழுதுபோக சுற்றுலா சென்று வருவீர்கள். உங்கள் பகுத்தறியும் திறன் கூடும். மனஉணர்ச்சிகள் கட்டுக்குள் இருக்கும். எண்ணங்கள் புதுமைகளாக மலரும். புதிய படைப்புகளை வாங்குவீர்கள். குடத்தில் இட்ட விளக்காக காரியமாற்றி வந்தவர்கள் குன்றின்மேலிட்ட விளக்காகப் பிரகாசிப்பீர்கள். வெளிநாடு சென்று வரும் வாய்ப்புகளும் உண்டாகும். நேர்மையான செயல்களால் வீட்டிலும் வெளியிலும் நீதியைக் காப்பாற்றுவீர்கள். சிலர் விலையுயர்ந்த வாகனங்களை வாங்கும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

guruஉத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டு முடித்துவிட்டு நற்பெயர் எடுப்பர். கடமைகளில் கண்ணும் கருத்துமாக இருப்பர். சிலநேரங்களில் சில இடையூறுகளைச் சந்திக்க நேரிடலாம். பணவரவுக்கு தடைகள் வராது. ஊதிய உயர்வினைப் பெறுவர். மேலதிகாரிகள் முழுமையான ஆதரவைத் தரும் ஆண்டாக இது அமைகிறது. வியாபாரிகள் திட்டமிட்ட வேலைகளில் கடுமையாக உழைப்பர். விற்பனைப் பிரதிநிதிகளை நியமிப்பர். இதனால் எதிர்பார்க்கும் அதிக லாபத்தைப் பெறுவர். கொடுக்கல் வாங்கல் நன்றாக அமையும். வங்கிகளிடமிருந்து கடன்கள் பெறுவர். கூட்டாளிகளின் ஆதரவும் கிடைக்கும். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். புதிய கழனிகள் வாங்குவர். கால்நடை பராமரிப்புக்கும் புழுபூச்சி ஒழிப்புக்கும் சிறிது செலவு செய்ய நேரிடும். பாசனத்துறையில் கூடுதல் கவனம் செலுத்தவும். செலவுக்குறைந்த மாற்றுப் பயிர்களையும் பயிரிட்டு கூடுதல் லாபத்தைப் பெறுவர். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும்.

அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வர். எதிரிகளால் கஷ்டங்கள் உண்டாகாது என்றாலும் அவர்கள் மீது ஒரு கண் வைத்திருக்கவும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும். சச்சரவுகளில் வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம். கலைத்துறையினர் வெற்றிமேல் வெற்றி காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். சக கலைஞர்களால் பாராட்டப்படுவர். ரசிகர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வர். புதிய நண்பர்களால் பலனுண்டு.

புதிய படைப்புகளை உருவாக்குவர். பணவரவு நன்றாக இருக்கும். சேமிப்பு உயரும். பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பு பாசம் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை அனுசரித்துச் செல்வர். ஆடை அணிமணிகள் சேர்க்கை உண்டு. வெளியூரிலிருந்து மனதிற்கினிய செய்திகளைக் கேட்பர். மேலும் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பேச்சில் நிதானம் தேவை. மாணவமணிகள் கல்வியிலும் விளையாட்டிலும் நன்கு தேர்ச்சி பெறுவர். ஆசிரியர்களின் பாராட்டும் பெற்று மகிழ்வர். மேலும் அதிக மதிப்பெண்களைப் பெற போதிய பயிற்சிகள் எடுத்து படிக்கவும். விளையாட்டினால் உடல் ஆரோக்கியத்தை வளர்த்துக் கொள்வர்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தி வழிபாடு உகந்தது.

Previous Post
Next Post

Leave a comment