astro_dinamani
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2017 – சிம்மம்
2014/12/29

simham(மகம், பூரம்,உத்திரம்  முதல் பாதம் முடிய)

இந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் தீராத பிரச்னையாக இருந்த விஷயம் தீர்ந்துவிடும். எதிர்காலத்திற்காகப் போடும் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறக் காண்பீர்கள். போட்டியாளர்களின் சதிகளை புதிய யுக்திகளை மேற்கொண்டு தகர்ப்பீர்கள். பூர்வீகச்சொத்து சம்பந்தமாக பங்காளிகள் கொடுத்திருந்த வழக்குகளில் உங்களுக்கு சாதகமாகத் தீர்ப்பு வரும். வருமானமும் படிப்படியாக உயரத்தொடங்கும். மனதிற்கினிய பயணங்களை குடும்பத்துடன் மேற்கொள்வீர்கள். குழந்தைகள் உங்கள் பேச்சிற்கு கட்டுப்படமாட்டார்கள். அதனால் அவர்கள் போக்கிலேயே சென்று அவர்களை நல்வழிப்படுத்தவும். மேலும் அனாவசியக் கடன்களையும் வாங்க வேண்டாம். கிடைத்தற்கரிய சந்தர்ப்பங்களைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வீர்கள். மேலும் புதிய வாய்ப்புகளையும் நழுவவிடமாட்டீர்கள். இல்லத்தில் திருமணம், குழந்தை பாக்கியம் ஆகிய இரண்டும் கைகூடும். சமுதாயத்தில் உயர்ந்தோரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். மேலும் உங்கள் தைரியம் பளிச்சிடும். வீட்டிலும் வெளியிலும் உங்கள் செல்வாக்கு உயரும். உடல் ஆரோக்கியம் மற்றும் மனவளம் சிறப்பாக இருக்கும். ஆன்மிகத்தில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். நவீன ஆராய்ச்சிகளிலும் மனம் ஈடுபடும்.

செப்டம்பர் மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் தன்னம்பிக்கையுடன் சோதனைகளை கடந்து வெற்றிவாகை சூடுவீர்கள். சிறிய விஷயங்களையும் பெரிதாகப் பேசும் நண்பர்களை விலக்கி விடுவீர்கள். ரகசியங்களை பிறர் அறியாவண்ணம் காப்பீர்கள். செயல்களை குறுக்கு வழிகளைத் தவிர்த்து நேர் வழியிலேயே செய்வீர்கள். கடினமான விஷயங்களிலும் உறுதியான நிலைப்பாட்டை எடுப்பீர்கள். உங்களின்கீழ் வேலை செய்பவர்கள் செய்யும் தவறுகளை கண்டுகொள்ளமாட்டீர்கள். தாய்வழி உறவினர்களின் உதவிகள் கிடைக்கும்.

குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும். துணிச்சலாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அனைத்து விஷயங்களையும் அனுபவ ரீதியாக அணுகுவீர்கள். வீடு மற்றும் வாகனங்களுக்கு பராமரிப்புச் செலவுகள் செய்யவேண்டி வரும். உடன்பிறந்தோர் முழுமையான ஆதரவு தரமாட்டார்கள். அவர்களுக்காக சிறிது செலவு செய்யவும் நேரிடும். கடன் வாங்கக்கூடிய நிலைமைகள் ஏற்பட்டால் தேவைக்கு மட்டுமே வாங்கவும். குழப்பங்களைத் தவிர்க்க தலைமையை நாடுவீர்கள். தியானம், பிராணாயாமம் போன்றவையும் கற்றுக்கொள்ளும் காலகட்டமாக இது அமைகிறது. உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட பணிகளை உடனுக்குடன் முடிக்கும் சூழ்நிலை உருவாகும். மேலதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வும் தடையில்லாமல் கிடைக்கும். வருமானம் வளரத்தொடங்கும். சிறிய உழைப்பில் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். விழிப்புடன் இருந்து காரியமாற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள்.

வியாபாரிகள் போதிய அக்கறை செலுத்தி வியாபாரத்தைப் பெருக்கவும். வியாபாரத்தில் எந்த முடிவையும் கூட்டாளிகளிடம் ஆலோசித்த பின்னரே எடுக்கவும். இல்லையெனில் சட்டச் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். ஆனால் அதிக செலவுகள் ஏற்படும். கால்நடைகளால் பெரிய லாபத்தை எதிர்பார்க்க முடியாது. பாசன வசதிகளைப் பெருக்கிக்கொள்வது நல்லது.

அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் ஆதரவு சில நேரங்களில் கிடைக்கும். அதனால் கட்சி மேலிடத்திற்கு தகவல் அனுப்பும்போது அவர்களது எண்ணங்களை அறிந்து எச்சரிக்கையுடன் அனுப்பவும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்ங்களைப் பெறுவதில் சற்று சிரமம் இருக்கும். அனைத்தையும் போராடியே பெறவேண்டி இருக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகள் பெறுவீர்கள். ரசிகர்களின் ஆதரவு உற்சாகம் தரும். பெண்மணிகளுக்கு முன்பிருந்த அனைத்துக் குழப்பங்களும் நீங்கி ஒற்றுமையான சூழ்நிலையை காண்பார்கள். திருமணமாகாத பெண்களுக்கு இந்த ஆண்டு திருமணம் கைகூடும். குழந்தைபாக்கியத்திற்குத் தவம் கிடந்தவர்கள் அந்த வாய்ப்பினைப் பெறுவார்கள். மாணவமணிகள் கல்வியில் கடுமையாக உழைத்தால் அதற்கேற்ற மதிப்பெண்களை அள்ளலாம். விளையாடும் நேரத்தில் காயம் படாமல் இருக்க, கவனத்துடன் ஈடுபடுவீர்கள்.

பரிகாரம்: விநாயகப்பெருமானை வழிபட்டு வரவும்.

Previous Post
Next Post