astrology dinamani
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – 2016: மேஷம்
2015/12/18

meshamமேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

இந்த 2016 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் வரை உள்ள காலகட்டத்தில் புரியாத புதிர்களுக்கு விடைகள் கிடைக்கும். சாதகமான தீர்ப்புகளும் வரும். உங்களைச் சுற்றி நடந்த சூழ்ச்சிகள் தானாகவே விலகும் அதிசயங்களைக் காண்பீர்கள். மனதில் தெளிவுடன் சிந்தித்து வாழ்க்கைப் பாதையை சீர் செய்து கொண்டு சாதனைகள் படைப்பீர்கள். பிரபலஸ்தர்களின் நட்பினால் புதுப்பொலிவுடன் வலம் வருவீர்கள். உங்களின் காரியங்களை அடுத்தவர்களின் உதவியின்றி தனித்தே செய்து முடிப்பீர்கள். உதாரணக்குணத்தால் உற்றார் உறவினர்களுக்கு உதவி செய்வீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். திறமைக்கேற்ற தொழில்களில் ஈடுபடுத்திக்கொண்டு சிறப்பான லாபத்தைப் பெறுவீர்கள். மேலும் உடலாரோக்கியமும் சிறக்கும். நெடுநாளாக பாதிக்கப்பட்டிருந்த நோய்களிலிருந்து விடுபட்டுவிடுவீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சியுண்டு. அவர்கள் சரியான பாதையில் முன்னேறுவதற்கு வழிகாட்டியாக இருப்பீர்கள்.

ஆகஸ்டு மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் மாறுபட்ட கருத்துள்ளவர்களிடமிருந்து விலகி விடுவீர்கள். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சமுதாயத்தில் உங்கள் புகழ் கூடும். உடன்பிறந்தோர் வகையில் சில செலவுகள் உண்டாகும். புனித ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவீர்கள். மகான்களின் ஆசிகளும் கிடைக்கும். பங்குவர்த்தகம் ஸ்பெகுலேஷன் துறைகளின் மூலம் சிறிய லாபங்களும் அவ்வப்போது கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுக்கும் நேரத்தில் உங்களின் பழைய அனுபவங்கள் கைகொடுக்கும். புதியவர்களிடம் பூசி மெழுகாமல் வெளிப்படையாக பேசி எண்ணங்களை வெளிப்படுத்துவீர்கள். பூர்வீகச் சொத்துக்களாலும் நன்மைகள் உண்டாகத் தொடங்கும். சமுதாயத்தில் உங்கள் பெயர், புகழ் அதிகரிக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து மனதிற்கினிய செய்திகள் வந்துசேரும் காலகட்டமென்றால் மிகையாகாது.

maha laxsmi-bwஉத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் தொய்வு இல்லாமல் நடக்கும். சரியான பயிற்சிகளை மேற்கொண்டு திறமையை மேலும் வளர்த்துக்கொள்வீர்கள். எதிர்வரும் இடையூறுகளையும் சாதுர்யத்துடன் சமாளிப்பர். மேலதிகாரிகளிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வர். வீடுகட்ட கடன்களும் கிடைக்கும். சக ஊழியர்கள் நட்புடன் இருப்பர். பணவரவுக்கு குறைவு வராது. வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கள் விஷயங்கள் சாதகமாக முடிவடைந்தாலும் செயல்களில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டியதிருக்கும். சமுதாயதத்தில் மதிப்பு மரியாதைகள் அதிகரித்து அந்தஸ்து உயரும். புதிய சந்தைகளை தேடிப்பிடித்து அங்கு வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கூட்டாளிகளிடம் எதையும் மனம்திறந்து பேசவேண்டாம். புதிய முதலீடுகளைச் செய்யவும். விவசாயிகள் செலவு குறைந்த மாற்றுப்பயிர்களைப் பயிரிட்டு நன்மை அடைவர். நீர்பாசன வசதிகளை பெருக்க எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கும். புதிய குத்தகைகளை இந்த காலத்தில் தவிர்த்திடுங்கள். புதிய உபகரணங்களை வாங்காமல் வாடகைக்கு எடுத்து பயிர் செய்யுங்கள். உடல் நலம் சீராக இருக்கும். உற்சாகத்துடன் உழைப்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களுடன் சுமுகமான உறவு இருக்கும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு ஏற்படும். கட்சிமேலிடம் உங்கள் பணியாற்றும் திறனைப் பாராட்டும். உட்கட்சிப் பூசலிலிருந்து விலகி இருப்பீர்கள். மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு சக கலைஞர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். இதனால் படிப்படியாக வளர்ச்சி அடைவீர்கள். பணவரவு எதிர்பாராத அளவுக்கு இருக்கும். சிறிய தடங்கலுக்குப்பிறகு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ரசிகர்களின் வரவேற்பும் அமோகமாக இருக்கும். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். அதேசமயம் குடும்பத்தில் உங்கள் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காமல் நடந்து கொண்டு அமைதியைக் காப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். ஆடை, ஆபரணங்களையும் வாங்குவர். மாணவமணிகள் கேளிக்கைகளில் கவனம் செலுத்தாமல் கல்வியில் முழு கவனத்துடன் ஈடுபட்டால்தான் நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும். நண்பர்களிடம் சுமுகமாகப் பழகவும். பெற்றோரும் ஆசிரியர்களும் ஆதரவு தருவர்.

பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.

Next Post

Leave a comment