அவிட்டம் 3-ம் பாதம் நட்சத்திரப் பலன்கள்

சிறந்த அறிவாளி. எடுத்துக் கொள்ளும் வேலைகளை சிறப்பாக செய்து முடிக்கும் திறமைசாலி.  மனம், வாக்கு,  செய்கையால் யாருக்கும் தீங்கிழைக்க நினைப்பதில்லை.  பக்திமான்கள். தன் சுய முயற்சியால் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள்.

பிறர் கருத்து தனக்கு ஒத்து வராவிட்டால் கடைசிவரை ஒத்துக் கொள்ளப் போவதில்லை. குடும்ப நிர்வாகத்தை பொறுத்தவரை தலைமை பொறுப்பில் இருப்பார்கள். கிரகபலம் நன்றாக இருந்தால் பிறப்பு வசதியான குடும்பத்தில் அமையும். தாராள மனப்பான்மை உடையவர்கள்.

எந்த விசயமானாலும் அலசி ஆராய்ந்து  தீர்க்கமாக முடிவெடுப்பார்கள். சில  சமயம் அவசர முடிவுகளை எடுத்து விட்டு ஆபத்தில் மாட்டிக் கொள்வதும் உண்டு. அந்நியர் பொருள்மீது  ஆசை இல்லாதவர்கள். மற்றவரால் மதிக்கப்படும் இவர்கள் மதிப்பான வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள்.  திருமண வாழ்க்கை திருப்திகரமாக அமையும். பெரும் செலவு செய்பவன் கணவனாக  வருவான் என்கிறது சாஸ்திரம் பக்தி மார்க்கத்தில்  அதிகம் நாட்டம் கொண்டவர்கள் படிப்பதிலும், தன்னை அலங்கரித்துக் கொள்வதிலும் அதிகம் நேரம் செலவலிப்பார்கள்.

நட்சத்திர  அதிதேவதை : அஷ்ட வசுக்கள்
பரிகார  தெய்வம் : முருகன்
நட்சத்திர  கனம் : ராட்சஸ கனம்
விருட்சம் : வன்னி(பாலில்லா மரம்)
மிருகம் : பெண் சிங்கம்
பட்சி : வண்டு
கோத்திரம் : புலஸ்தியர்

Previous Post
Next Post