அனுஷ நட்சத்திரப் பலன்கள் (விருச்சிகம்)

தடைகளை தாண்டும் தைரியமும் வல்லமையும் மிக்க அனுஷ நட்சத்திரக்காரர்களுக்கு கிரக அமர்வு சரியாக அமையாவிட்டால் போராடி வெற்றிபெற வேண்டி இருக்கும். கடின உழைப்பாளிகள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நிரந்தர நண்பர்கள், நிரந்தர உறவுகள் அமைவதில்லை. தங்கள் இஷ்டப்படியே நடப்பதால் அடுத்தவர்களின் அன்பும் ஆதரவும் இருப்பதில்லை.

இளம்வயதிலேயே வாழ்க்கை மீது பற்றுவந்துவிடும். அதனாலேயே இளம்வயதிலேயே தொழில் அல்லது வேலை என்று இவர்கள் வாழ்க்கைப் பயணம் துவங்கும். சகோதர உறவுகள் சரியாக வருவதில்லை. ஏதோ பெயருக்கு இருப்பார்களே தவிர அவர்களால் நன்மைகள் பெற முடியாத நட்சத்திரம் இது.

பல்வேறு கஷ்டங்களை சந்தித்தாலும் மணவாழ்க்கை மருந்தாக அமையும். இவர்களின் குண நலன்களை புரிந்து கொள்ளும் இல்லறத்துணையால் சவாலான பிரச்சனைகளைக் கூட சந்தோஷமாக  தாண்டிவருவார்கள். பொதுவாக இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் இவர்களை விடப் பெரிய மனிதர்களாக, உயர்ந்தவர்களாக இருப்பார்கள்.

நட்சத்திர அதிதேவதை – : லக்ஷ்மி
பரிகார தெய்வம்    :- துர்க்கை & காளி
நட்சத்திர கணம் –  : தேவ கணம்
விருட்சம் –    : மகிழ மரம் (பாலில்லாத மரம்)
மிருகம்    :- பெண் மான்
பட்சி –   : வானம்பாடி
கோத்திரம்   :- அகத்தியர

Previous Post
Next Post