astro_dinamani
அசுவினி நட்சத்திரப் பலன்கள்
2013/11/23

அமைதியாக இருந்தாலும், தங்கள் காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.  நினைத்த காரியத்தை எக்காரணத்தைக் கொண்டும் மாற்றிக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாதவர்கள். பிடிவாத குணமிக்கவர்கள். அசுவினி நட்சத்திரம் கேதுவின் நட்சத்திரம்.

கேது ஒரு ஆன்மீக கிரகமாக இருப்பதால் இயற்கையாகவே இவர்களுக்கு ஆன்மீக உணர்வு அதிகம் இருக்கும். சில சமயம் தங்கள் சக்திக்கு மீறிய செயல்களில் ஈடுபட்டு அதனால் பெரும்  துன்பங்களை சந்திக்க வைப்பதும் உண்டு. குடும்ப அமைப்பை பொறுத்தவரை உண்மையாக நேசிப்பவர்கள். சிக்கனவாதிகள். தாம்பூலப் பிரியர்கள். இடுப்பில் மச்சமிருக்கும். பொதுவாக சுறுசுறுப்பு குறைவாக இருக்கும்.

நட்சத்திர அதிதேவதை  –   சரஸ்வதி
பரிகார தெய்வம்   –   விநாயகர்
நட்சத்திர கணம் (குணம்)-   தேவகணம்
விருச்சம்   –   எட்டி (பாலில்லா மரம்)
மிருகம்   –   ஆண் குதிரை
பட்சி   –   ராஜாளி
கோத்திரம்   –   பரத்துவாசர்

Previous Post
Next Post