ஒருவர் தன் வாழ்க்கையில் பெறும் வெற்றிக்கும் தோல்விக்கும், மகிழ்ச்சிக்கும் துக்கத்துக்கும் காரணம் கிரகங்களே என்பதில் முழு நம்பிக்கை உள்ளவர் ஜோதிடரத்னா திரு. சோ.சந்திரசேகரன். ஜோதிடப் பரம்பரையில் வந்தவர். சுமார் 35 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர். எந்த ஒரு ஜாதகத்தையும் டிகிரி சுத்தமாக என்று சொல்வார்களே, அப்படி ஆராய்ந்து பலன்களை துல்லியமாகச் சொல்லக்கூடியவர். இந்திய ஜோதிடம் தவிர, மேலை நாட்டு ஜோதிடத்திலும் நிபுணத்துவம் உள்ளவர். தனது ஜோதிடத் திறமைகளை வெளிப்படுத்தி, 'நவீன ஜோதிட போதினி' என்ற புத்தகத்தை எழுயிருக்கிறார்.
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர், பரம்பரையாக ஜோதிடக் குடும்பத்தில் வந்தவர். தாத்தா, தந்தை என முறையாக பரம்பரை அனுபவத்தில் ஜோதிடம் கற்றவர். தாமிரபரணி பாயும் நவதிருப்பதிகளில் ஒன்றும் 108 திவ்யதேசங்களில் ஒன்றுமான திருக்குளந்தை என்ற பெருங்குளம் கிராமம் மற்றும் கோவில் ஜோதிடர்.